"முதுமை வயதைப் பொறுத்தது அல்ல நம் உணர்ச்சியை பொறுத்தது....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17-07-2018)..!

2018-07-17 08:47:34

17.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

தட்சிணாயனம் கிரிஷ்மருது கடக மாதம்.

சுக்கில பட்ச பஞ்சமி திதி முன்னிரவு 10.14 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூரம் நட்சத்திரம் மாலை 3.20 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். சித்தயோகம். மாலை 3.20 வரை. பின்னர் அமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) ஸ்கந்த பஞ்சமி, சமி கௌரி விரதம்.

மேடம் : வீம்பு, சச்சரவு 

இடபம் : விவேகம், வெற்றி

மிதுனம் : இன்பம், சுகம்

கடகம் : வீரம், வெற்றி

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்சிகம் : பரிவு, பாசம்

தனுசு : சோர்வு, அசதி

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : அச்சம், பகை

மீனம் : லாபம், லக்ஷ்மீகரம்

சூனியாக்கம், ஆடிப் பிறப்பு பண்டிகை. ஆடி மாதத்து பண்டிகைகள் விரதங்கள் ஆடிப் பதினெட்டு, ஆடிப் பெருக்கு, ஆடி ஞாயிறு, ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடிப்பூரம்,  ஆடிஅமாவாஸை, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஸ்ரீ வரலஷ்மி விரதம், சாதுர்மாச விரதம்,  

(“தீமை செய்தவரை அலட்சியம் செய்து விடுங்கள் அதுதான் பழிவாங்குவதன் ஆரம்பம். மன்னித்து விடுங்கள் அது தான் பழிவாங்குதலின் முடிவு” உமர் கயாம்)

சனி, பகவானின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 5

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right