"புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13-07-2018)

2018-07-13 08:45:50

13.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

அமாவாஸ்யை திதி காலை 9.21 வரை. அதன் மேல் சுக்கில பட்ச பிரதமை திதி. புனர்பூசம் நட்சத்திரம் முன்னிரவு 9.02 வரை.  பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்தயோகம் முன்னிரவு 9.02 வரை. பின்னர் மரணயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கேட்டை, மூலம். சுபநேரங்கள் பகல் 12.15– 1.15. மாலை 4.45– 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00,  வாரசூலம்– மேற்கு (பரிகாரம் –வெல்லம்).  

மேடம் : புகழ், பெருமை

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : அன்பு, இரக்கம்

கடகம் : பரிவு, பாசம்

சிம்மம் : சோர்வு, அசதி

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : அச்சம், பகை

விருச்சிகம் : நோய், வருத்தம்

தனுசு : சினம், பகை

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : தனம், சம்பத்து

மீனம் : போட்டி, ஜெயம்

 

இன்று புனர்பூசம் நட்சத்திரம். ஸ்ரீ இராம பிரான் அவதரித்தது இந் நட்சத்திரத்தில். ராம நாமத்தின் மகிமை விஷ்ணு சகஸ்ர நாமத்தில் சிவபெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது. ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வாராணனே. ராகு கிரகத்தின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right