"துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12-07-2018)..!

Published on 2018-07-12 08:45:31

12.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பகல் 11.46 வரை. அதன்மேல் அமா­வாஸ்யை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.40 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: அமா­வாஸ்யை மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, பிற்­பகல் 12.15 – 1.15, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்).

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

கடகம் : நோய், வருத்தம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : பிணி, பீடை

துலாம் : நன்மை, யோகம்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : பகை, விரோதம்

கும்பம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று ஸர்வ அமா­வாஸ்யை விரதம். பிண்ட பித்ரு, பிதிர் தர்ப்­பணம் நன்று. திரு­வா­திரை நட்­சத்­திரம். பெரிய திரு­வடி என ஸ்ரீவைஷ்­ண­வர்­களால் போற்றி துதிக்­கப்­ப­டு­ப­வரும் திரு­மாலின் வாக­னமும் திரு­மாலின் கொடியில் வீற்­றி­ருப்­ப­வ­ரு­மான ஸ்ரீக­ரு­டாழ்வார் அவ­த­ரித்­தது இந்­நட்­சத்­தி­ரத்தில். இன்று ஸ்ரீக­ரு­டாழ்­வாரை வழி­படல் நன்று. சிவ வழி­பாடும் உகந்­தது.

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று முழுச்­சு­வ­ரான குரு­ப­கவான் ஸ்தான­ப­லத்தை விட பார்வை பலம் மிக்­கவர். 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 3, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பொன் னிறம், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)