"நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10-07-2018)..!

Published on 2018-07-10 08:25:07

10.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச துவாதசி திதி மாலை 4.06 வரை. அதன் மேல் திரயோதசி திதி. ரோகினி நட்சத்திரம் பின்னிரவு 1.37 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி, தேய்பிறை துவாதசி. அமிர்தசித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சுவாதி, விசாகம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்—பால்) 

மேடம் : செலவு, விரயம்

இடபம் : இலாபம்,  ஆதாயம்

மிதுனம் : சுகம்,  ஆரோக்கியம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : பகை, பயம்

கன்னி : நற்செய்தி, மகிழ்ச்சி

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : அன்பு, பிரியம்

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : வரவு, இலாபம்

கிருஷ்ணபட்ச மகா பிரதோஷம் சந்தியா காலத்தில் சிவவழிபாடு. கூர்ம ஜெயந்தி. எம் பெருமான் ஸ்ரீமன் நாராயணன் கூர்ம அவதார தினம். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலில் மந்திர மலையை மத்தாகவும் வாசுகியை நாணாகவும் கடைய மந்திரமலை நிலை பொறுக்காது சரிய, ஸ்ரீமன் நாராயணன் கூர்ம அவதாரமெடுத்து மந்திர மலையை நிலை நிறுத்திய அவதார தினம். இத்தினத்தில் ஸ்ரீமன் நாராயண வழிபாடு சிறப்பானது.

சூரியனின் பூரண அதிகாரம் கொண்ட தினம் இன்று.

1 ஆம் இலக்கத்துக்குரிய இத்தினத்தில் சூரிய வழிபாடு சிறப்பானது.

அதிர்ஷ்ட எண்கள்:1– 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)