"அளவு கடந்த செல்லம் ஆபத்தைத்தரும். அளவு கடந்த கண்டிப்பு வெறுப்பைத்தரும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08-07-2018)..!

Published on 2018-07-08 09:01:34

08.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

கிருஷ்ணபட்ச தசமி திதி. இரவு 7.21 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. பரணி நட்சத்திரம். பின்னிரவு 3.34 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. தசமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: அஸ்தம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15. ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்)

மேடம் : ஏமாற்றம், கவலை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : லாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : தடை, ஏமாற்றம்

துலாம் : மகிழ்ச்சி, சந்தோஷம் 

விருச்சிகம் : விரயம், செலவு

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : சிக்கல், சங்கடம்

மீனம் : அசதி, வருத்தம் 

இன்று பரணி நட்சத்திரம் துர்க்கை இந்நட்சத்திர தேவதையாவாள். இன்று துர்க்கையை வழிபட வீரம் பெருகும். 

(“அறிவிலி என்பவன் அழைக்கப்ப டாத விருந்தாளி” – விதுரநிதி)

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)