"மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05-07-2018)..!

Published on 2018-07-05 08:20:04

05.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 21ஆம் நாள் வியாழக்கிழமை

கிருஷ்ணபட்ச ஸப்தமி இரவு 9.07வரை. அதன்மேல் அஷ்டமி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 3.33 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி திதி சித்த யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மகம். சுபநேரங்கள் பகல் 10.45-–11.45, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 06.00 –7.30, குளிகை காலம் 9.00 –10.30, வாரசூலம் – தெற்கு பரிகாரம். தைலம். சுப முகூர்த்த நாள்.

மேடம் : அன்பு, பாசம்

இடபம் : வரவு, லாபம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : சிரமம், தடை 

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : நலம், ஆரோக்கியம்

மகரம் :  வீம்பு, சச்சரவு

கும்பம் :  தடை, தாமதம்

மீனம் :  உழைப்பு, உயர்வு

இன்று உத்தரட்டாதி நட்சத்திரம் காமதேனு என்னும் தெய்வீக பசு இந்நட்சத்திர தேவதையாகும். இன்று கோ பூஜை. பசுவுக்கு அகத்திக் கீரை உணவாக கொடுத்தல் என்பன நன்று.

("காலம் நதியைப் போன்று, உற்பத்தி யாகும் இடத்திற்கு அது திரும்பவே திரும்பாது" ரிவால்)

புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

பொருந்தா எண்கள்: 6,8,9

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  மஞ்சள், சாம்பல் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)