"திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04-07-2018)..!

Published on 2018-07-04 09:06:41

04.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 20ஆம் நாள் புதன்கிழமை

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி முன்னிரவு 8.44வரை. அதன்மேல் ஸப்தமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 2.35 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி அமிர்த யோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயில்யம் சுபநேரங்கள் பகல் 10.45-–11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00 –1.30, எமகண்டம் 7.30 –9.00, குளிகை காலம் 10.30 –12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் பால்) சஷ்டி விரதம்.

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : உழைப்பு, உயர்வு

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நன்மை, யோகம் 

சிம்மம் : காரியசித்தி, அனுகூலம்

கன்னி : நேர்மை, முன்னேற்றம்

துலாம் : செலவு, விரயம்

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : புகழ், செல்வாக்கு

மகரம் :  தனம், சம்பத்து

கும்பம் :  அமைதி, சாந்தம்

மீனம் :  உயர்வு, மேன்மை

இன்று கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம், உபவாஸ மிருந்து முருகப் பெருமானை வழிபடுதல் நன்று. பூரட்டாதி நட்சத்திரம் குபேரன் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று லக் ஷஷ்மி குபேர பூஜை செய்திட செல்வச் செழிப்பு உண்டாகும். சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.

"அனுபவம் ஒரு கடுமையான ஆசிரி யர் காரணம் அது முதலில் பரீட்சை வைக்கின்றது. பின்னர் தான் பாடம் கற்பிக்கின்றது")

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)