"கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26-06-2018)..!

Published on 2018-06-26 08:23:14

26.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கிலபட்ச திரயோதசி திதி காலை 8.08 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை 9.04 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி, வளர்பிறை, சதுர்த்தசி. சித்தயோகம், சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பரணி. சுபநேரங்கள்:  பகல் 10.30 – 11.30, மாலை 5.00– 6.00, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) 

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : தோல்வி, கவலை

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : சுகம், ஆரோக்கியம்

கன்னி : அன்பு, பாசம்

துலாம் : சுபம், மங்களம்

விருச்சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : மேன்மை, உயர்வு

கும்பம் :காரியசித்தி, அனுகூலம்

மீனம் : பிணி, பீடை

இன்று அனுஷம் நட்சத்திரம். ஸ்ரீமகாலஷ்மி தாயார் இந்நட்சத்திர தேவதையாவார். மங்கலம் தருபவள். சுமங்கலிப் பெண்களின் மாங்கல்யத்தை காப்பவள். திருப்பாற் கடலில் உதித்தவள். ஸ்ரீரெங்க நாச்சியார். இன்று அவளை விரதம் இருந்து வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களையும் அருள் வாள்.

 (“மனித சமூகமே உன்னை கண்டு போற்றி பெருமைப்படும்படி உன்னை நீ மாற்றிக்கொள். அதன்படி நீ நடந்துகொள் – என் ஆத்மாவின் போதனை”) 

சனி, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நிறமுடைய மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)