"உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25-06-2018)..!

2018-06-25 08:49:09

25.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 11 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி காலை 7.17 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. விசாகம் நட்­சத்­திரம் காலை 7.33 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை திர­யோ­தசி மர­ண­யோகம் காலை 7.33 வரை. பின்னர் சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அனுஷம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 5.30– 6.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்)

மேடம் : பேராசை, நஷ்டம்

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : நோய், வருத்தம்

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : வாழ்வு, வளம்

மகரம் : பக்தி, ஆசி

கும்பம் : புகழ், பெருமை

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

இன்று சுக்­கி­ல­பட்ச (ஸோம) மஹா பிர­தோஷம். இன்று சந்­தியா காலத்தில் பிர­தோஷ வேளையில் சிவபூஜையில் ஈடு­ப­டு­வதால் தடைகள், தாம­தங்கள், பிணி, பீடைகள், கஷ்­டங்கள் விலகும். சிவ தலங்­களில் பிர­தோஷ வழி­பா­டு­களில் கலந்­து­கொள்­வது வாழ்வில் முக்­கிய நல்ல ஏற்­றங்கள் செய்யும் என்­பது அனு­பவ உண்மை.

(“உன் நண்­பனை இரக­சி­ய­மாக திருத்து; வெளிப்­ப­டை­யாகப் புகழ்”) 

கேது, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் மஞ்சள், அடர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right