அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட, புத்திசாலியான விரோதியை அடைவது மேல்...": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21-06-2018)..!

Published on 2018-06-21 08:41:07

21.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 7 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி காலை 8.56 வரை. அதன் மேல் நவமி திதி உத்­தரம் நட்­சத்­திரம் காலை 6.21 வரை. அதன் மேல் அஸ்தம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.53 வரை. சிரார்த்த திதி வளர்­ பிறை நவமி. மர­ண­யோகம் காலை 6.21 வரை. பின்னர் சித்­த ­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: சதயம். சுப­நேரம் பகல்10.30– 11.30, பிற்­பகல் 12.30– 1.30, ராகு­ காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) சூரிய உத­யத்­திற்கு முன் ஆனி உத்­தர தரி­சனம்.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம் : தடை, தாமதம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : பிணி, பீடை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : புகழ், சாதனை

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : நஷ்டம், கவலை

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : சுபம், மங்­களம்

சகல சிவா­ல­யங்­க­ளிலும் அதி­காலை ஆனித் திரு­மஞ்­சனம். நட­ராஜர் அபி­ஷேகம். உத்­தரம் நட்­சத்­திரம் மகா­லக்ஷ்மி தாயாரை வழி­படல் நன்று. (“பணம் பேச ஆரம்­பிக்­கும் ­போது நியாயம் மௌனம் சாதிக்­கி­றது. பணம் தலை­கு­னிந்து பணி­யாற்றும் அல்­லது தலை குப்­புறத் தள்­ளி ­விடும்” – ஹோம்ஸ்) குரு, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இளஞ்­சி­கப்பு, வெளிர் மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)