"புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை.... ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18-06-2018)..!

Published on 2018-06-18 09:05:14

18.06.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 04 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி பிற்­பகல் 2.23 வரை. அதன்மேல் சஷ்டி திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் காலை 9.35 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். திதித்­வயம் சிரார்த்த திதிகள்: வளர்­பிறை, பஞ்­சமி, சஷ்டி. சித்­த­யோகம் காலை 9.35 வரை பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வார சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்) 

மேடம் : செலவு, விரயம்

இடபம் : அன்பு, மகிழ்ச்சி 

மிதுனம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : காரி­ய­சித்தி, அனு­கூலம்

துலாம் : சோர்வு, அசதி

விருச்­சிகம் :பிர­யாணம், அலைச்சல்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : நன்மை, யோகம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : அன்பு, பிரியம்

இன்று மாணிக்­க­வா­சகர் குரு­பூஜை தினம். ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்­டாமல் இனித்­திடும் தேனிலும் இனிய திரு­வா­ச­கத்­தையும், திருக்­கோ­வை­யையும் பாடி­யவர். பாவை பாடிய வாயால் கோவை பாடி­ய­ருள்க என்று பர­மனால் பணித்­த­ருளப் பெற்­றவர். தெஹி­வளை ஸ்ரீவிஷ்ணு ஆல­யத்தில் இலட்ச்­சார்ச்­சனை பூர்த்தி ஸ்ரீ சூக்த சம்­பு­ரித புருஷ சூக்த ஹோமம். 

 ("கடந்த காலத்தை மறந்­து­விடு. நிகழ்­கா­லத்தில் உயி­ரோட்­டத்­துடன் இரு" – ஓஷோ)

செவ்வாய், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 

பொருந்தா எண்கள்: 8, 2 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)