"குழிக்குள் விழுந்து மேலே வர தவிப்பவனுக்கு கை நீட்டும் முன் உன் கால்களை வலுவாக ஊன்றிக்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு.!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14-06-2018)..!

Published on 2018-06-14 08:58:34

14.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 31 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல ­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 11.56 வரை. அதன்மேல் துவி­தியை திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் மாலை 3.56 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை பிர­தமை, மர­ண ­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அனுஷம், கேட்டை. சுப­நேரம்: பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­கா­ரம்–­தைலம்). 

 மேடம் : அச்சம், பகை 

இடபம் : சோர்வு, அசதி

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : பணம், பரிசு

சிம்மம் : பகை, எதிர்ப்பு

கன்னி : புகழ், பெருமை

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : குழப்பம், சஞ்­சலம்

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : தடை, தாமதம்

மீனம் : நற்­செயல், பாராட்டு

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­ மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் இலட்ச நாம அர்ச்­சனை “நாமம் பல சொல்லி நாரா­யணா வென்று நாமங்­கையால் தொழு தும் வாம­ருவி மண்­ணு­லகம் உண்டு உமிழ்ந்த வண்­ட­றையும் தான் துழாய் கண்­ண­னையே காண்க நம்கண்.

–மூன்றாந் திரு­வந்­தாதி பேயாழ்வார்.

("நதியின் நோக்கம் கடல் தான். அதனால் தான் அது எல்­லா­வற்­றையும் தாண்­டு­கி­றது") புதன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)