"சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (12-06-2018)..!

Published on 2018-06-12 08:42:29

12.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

கிருஷ்ண பட்ச திரயோதசி திதி காலை 6.07 வரை அதன் மேல் சதுர்த்தசி பின்னிரவு 4.20 வரை. பின்னர் அமாவாஸை திதி. (திதி அவமாகம்) சிரார்த்த திதி சதுர்த்தசி சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி விசாகம் சுபநேரங்கள் பகல் 10.30 –-11.30, மாலை 4.30– -5.30, ராகு காலம் 3.00 –---4.30 எமகண்டம் 9.00 -–10.30, குளிகை காலம் 12.00 -– 1.30, வாரசூலம் வடக்கு பரிகாரம் பால் மாத சிவராத்திரி கார்த்திகை விரதம், கார்த்திகை நட்சத்திரம் மாலை 6.32 வரை பின்னர் ரோகிணி நட்சத்திரம்.

மேடம் : அமைதி, சாந்தம் 

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : கோபம், அவமானம்

கடகம் : நம்பிக்கை, காரியசித்தி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : தோல்வி, கவலை

விருச்சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : லாபம், ஆதாயம்

மகரம் : நிறைவு, பூர்த்தி

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

இன்று முதல் தெகிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் இலட்சார்ச்சனை ஆரம்பம்.

("வார்த்தைகள் பூப்போன்றவை, அதை தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் நன்மதிப்பை பெறமுடியும்")

குரு சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1,-5,-7-,3.

பொருந்தா எண்கள் 6,-9-,8.

அதிர்ஷ்ட வர்ணங்கள் இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)