"வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (11-06-2018)..!

Published on 2018-06-11 12:53:53

11.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ணபட்ச துவாதசி திதி காலை 7.37 வரை. அதன்மேல் திரயோதசி திதி. பரணி நட்சத்திரம் முன்னிரவு 7.25 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சித்தயோகம். சிரார்த்த திதி. தேய்பிறை. திரயோதசி. கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சித்திரை, சுவாதி. சுபநேரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகைகாலம் 1.30 – 3.00, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்) கழற்சிங்க நாயனார் குருபூஜை.  

மேடம் : அன்பு, மகிழ்ச்சி 

இடபம் : நற்செயல், பாராட்டு

மிதுனம் : சுகம், ஆரோக்கியம்

கடகம் : புகழ், சாதனை

சிம்மம் : பகை, எதிர்ப்பு

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : தனம், சம்பத்து

விருச்சிகம் : தோல்வி, கவலை

தனுசு : மறதி, விரயம்

மகரம் : தடை, எதிர்ப்பு

கும்பம் : ஆதாயம், இலாபம்

மீனம் : புகழ், செல்வாக்கு

இன்று கிருஷ்ணபட்ச ஸோம மகா பிரதோஷம். மாலை பிரதோஷ நேரத்தில் சிவபூஜையில் ஈடுபட்டு சிவதரிசனம் செய்வதால் பிணி, பீடைகள், தடைகள், கஷ்டங்கள், பாவங்கள், வறுமைகள் விலகும். திருமணத் தடங்கல், புத்திர தோஷங்கள் விலகும். சிவபுராணம், சிவ அஷ்டோத்திரம் தியானிப்பது மிக்க பயனுள்ளதாகும்.

 ("நாம் ஒருபோதும் வாழ்வதே இல்லை. வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்நாளைக் கழிக்கின்றோம்" – மகாத்மா காந்தியடிகள்)

சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)