"நாம் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (07-06-2018)..!

Published on 2018-06-07 09:01:44

07.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 24 ஆம் நாள் வியாழக்கிழமை.

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி காலை 9.03 வரை. அதன்மேல் நவமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6.50 வரை. பின்னர் உத் 

திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி 

தேய்பிறை நவமி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: மகம், பூரம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்) 

மேடம் : நற்செயல், பாராட்டு

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : காரியசித்தி, அனுகூலம்

சிம்மம் : புகழ், சாதனை

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : அமைதி, தெளிவு

விருச்சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : மறதி, விரயம்

மகரம் : நலம், ஆரோக்கியம்

கும்பம் : தனம், சம்பத்து

மீனம் : அன்பு, பாசம்

இன்று பூரட்டாதி நட்சத்திரம். குபேரன் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று லக் ஷ்மி தன ஆகர்ஷன குபேர பூஜை செய்தல் நன்று. இதனால் செல்வச் செழிப்பு, இல்லங்களில் மகிழ்ச்சி உண்டாகும்.

("ஆட்டின் வேடத்தில் ஓநாய்களும் வரலாம். ஆதலால் நீ எச்சரிக்கையாக இரு" – இயேசுநாதர்)

கேது, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6

பொருந்தா எண்கள் : 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்   : வெளிர் மஞ்சள், அடர் பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)