"உங்கள் எதிரிகளை கவனியுங்கள், அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (05-06-2018)..!

Published on 2018-06-05 08:27:32

05.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி காலை 6.52 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 3.41 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி. சித்தயோகம் மாலை 3.40 வரை. பின்னர் மரணயோகம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை  4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : தனம், சம்பத்து

மிதுனம் : உயர்வு, மேன்மை 

கடகம் : நலம், ஆரோக்கியம்

சிம்மம் : ஓய்வு, அசதி 

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : சலனம், சஞ்சலம்

விருச்சிகம் : இன்பம், மகிழ்ச்சி

தனுசு : மறதி, விரயம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : அமைதி, தெளிவு

இன்று அவிட்டம் நட்சத்திரம். அஷ்ட வசுக்கள் இந்நட்சத்திர தேவதைகளாவர். அஷ்ட வசுக்களால் போற்றி துதிக்கப் பெறும் அனந்தசயன பத்மநாப பெரு மாளை வழிபடல் நன்று.

("நாம் வெற்றிகளை இழப்பதற்கு காரணம் வசதிகள் இல்லாதிருப்பது அல்ல; முனைப்பான முயற்சி இல்லா மையாலே நம் வெற்றிகள் பறிபோ கின்றன" – லாரோஷ்புக்கோ)

புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்:  8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)