"வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில் தான் உள்ளது.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04-06-2018)..! 

Published on 2018-06-04 08:56:40

04.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 21 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி நாள் முழு­வதும். திரு­வோணம் நட்­சத்­திரம் பிற்­பகல் 1.28 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி அமிர்த சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30, மாலை 3.00– 4.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00 வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) சுப­மு­கூர்த்த நாள். வாஸ்து நாள்– வாஸ்து நேரம் பகல் 10.06– 10.42 கிருஷ்ண பட்ச சஷ்டி விரதம். சிர­வண தீபம். திதி திரி­தியைப் பிருக்கு.

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : பகை, பயம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : செலவு, பற்­றாக்­குறை

சிம்மம் : இலாபம், ஆதாயம் 

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : நேர்மை, கீர்த்தி

விருச்­சிகம் : விரயம், கவலை

தனுசு : தடை, தாமதம்

மகரம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கும்பம் : அச்சம், பகை

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

திரு­வோண (சிர­வண) விரதம். விஷ்ணு வழி­பாடு சிறந்­தது. விஷ்ணு சூக்­தங்­களில் தேரி­யவை. உல­கங்­களை அளந்­தவன் விஷ்ணு. இவ­னு­டைய மூன்று அடி­களில் எல்லா உல­கமும் மறைக்­கப்­பட்­டது. அவனே சர்வ ரட்­சகன். தர்ம ஸ்தாபகன் விஷ்­ணு­வு­டைய ஸ்தானமே மேலான பரம பதம். முக்­தர்­களால் துதிக்­கப்­ப­டு­பவன். யக்ஞ பலப் பிரதன் அவனே. காலச்­சக்­க­ரத்தை சுழற்­று­ப­வனும் அடி­யார்க்­காக போர் புரி­ப­வனும் அவனே. துதிக்­கத்­தக்­க­வனும் சங்­கீர்த்­தனம் செய்யத் தக்­க­வனும் பூஜிக்கத் தக்­க­வனும் அவனே. ஸர்வம் விஷ்ணு மயம் ஜெகத். விஷ்­ணுவை வழி­ப­டுவோம்.

(கழு­தையின் வாலை ஒருவன் முத்­த­மி­டு­கிறான் என்றால் எல்லாம் ஒரு காரி­ய­மா­கத்தான் –பார­சீகம்)ராகு, குரு கிர­கங்­களின் ஆதிக்­க­நா­ளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9, 3

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள் கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம்  ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)