"வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28-05-2018)..! 

Published on 2018-05-28 08:26:49

28.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி முன்­னி­ரவு 7.31 வரை. அதன்மேல் பௌர்­ணமி திதி. விசாகம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.53 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். வளர்­பிறை சதுர்த்­தசி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம் –தயிர்) பௌர்­ணமி விரதம் வைகாசி விசாகம். அக்­கினி நட்­சத்­திர தோஷ முடிவு.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் :திறமை, முன்னேற்றம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : சினம், பகை

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : வாழ்வு, வளம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : அசதி, வருத்தம்

மீனம் : வாழ்த்து, ஆசி

இன்று நம்­மாழ்வார் திரு நட்­சத்­திர திருநாள். ஏரார் வைகாசி விசா­கத்தின் ஏற்­றத்தை பாரோர் அறியப் பகர்­கின்றேன். சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன்  எழில் குருகை நாதன் அவ­த­ரித்த நாள். அவ­த­ரித்த ஊர் திருக்­கு­ருகூர் ஆழ்வார் திரு­ந­கரி, மாதம் வைகாசி, நட்­சத்­திரம் விசாகம். அம்சம் சேனை முத­லி­யா­ரம்சம், அரு­ளிய பிர­பந்­தங்கள் திரு­வி­ருத்தம், திரு­வா­சி­ரியம், பெரிய திரு­வந்­தாதி, திருவாய் மொழி, திருக்­கு­ருகைச் சட­கோபன் திரு­வ­டிகள் வாழியே.

(“நல்­லொ­ழுக்கம் என்­பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்­ம­திப்­பாகும்” – அரிஸ்­டோட்டில்)

சூரியன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)