"நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சத்தம் போட்டு பேசட்டும்.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27-05-2018)..! 

Published on 2018-05-27 09:42:26

27.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

சுக்கில பட்ச திரயோதசி திதி முன்னிரவு 7.09 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. சுவாதி நட்சத்திரம் முன்னிரவு 10.45  வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ் டம நட்சத்திரங்கள்:  ரேவதி, அஸ்வினி. சுபநேரங்கள்: பகல் 10.30–11.30, மாலை 3.30– 4.30, ராகுகாலம் 4.30 –6.00, எமகண்டம் 12.00–1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம் –மேற்கு (பரிகாரம் –வெல்லம்) பிரதோஷ விரதம் சுப முகூர்த்த நாள்.

மேடம் : முயற்சி, முன்னேற்றம்

இடபம் : அமைதி, தெளிவு

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : யோகம், ஆசி

துலாம் : உதவி, நட்பு

விருச்சிகம் : உழைப்பு, உயர்வு

தனுசு : அன்பு, ஆசி

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : சினம், பகை

மீனம் : தோல்வி, கவலை

இன்று சுக்கிலபட்ச மஹா பிரதோஷம். இன்று பிரதோஷ நேரத்தில் சிவ வழி பாடு பூஜையில் ஈடுபடுவதால் பிணி, பீடைகள், தடைகள், கஷ்டங்கள், பாவங் கள், வறுமைகள் விலகும். திருமணத் தடங்கல், புத்திர தோஷங்கள் விலகும். 

(“தோல்வி என்றால் இறைவன் உங் களை கைவிட்டுவிட்டார் என்று அர்த்த மாகாது, உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத் துள்ளார் என்றே பொருளாகும்”)

செவ்வாய், கேது  கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 8

பொருந்தா எண்கள்: 7,8,2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)