"இவ்வுலகில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24-05-2018)..!  

Published on 2018-05-24 08:38:36

24.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 10 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 9.00 மணி­வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.17 வரை. அதன்மேல் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை, தசமி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் –மேற்கு. (பரி­காரம்– தைலம்). 

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : பரிவு, பாசம்

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : யோகம், அதிர்ஷ்டம்

கன்னி : வரவு, இலாபம்

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : பிர­யாணம், செலவு

தனுசு : சிந்­தனை, குழப்பம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : பிரமை, அதிர்ச்சி

ஸ்ரீ வெங்­க­டேச சுப்­ர­பாதம், “யோஷா கணேத வர­தத்தி விமத்ய மாநே கோஷா­ல­யேஷு ததி மந்­தன திவ்ர கோஷா, ரோஷாத்­கலிம் விதந்தே ககு­பஸ்­ச ­கும்பா சேஷாத்­திரி சேக­ர­விபோ தவ ஸுப்­ர­பாதம்” "திரு­வேங்­க­டவன் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி" மங்­கைகள் கையில் மத்­துகள் ஆடிட பொங்­கிடும் தயிர் வெண்ணெய் இசை­யொலி எழுப்­பிட எங்­குமே நிறைந்­திட்ட எதி­ரொலி கேளாயோ! தங்­க­மலை திரு­வேங்­க­டவா திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்!

(“நம் வீண் சந்­தே­கங்­களே நமக்கு பெரும் பகை­வர்கள்”– ஷேக்ஸ்­பியர்)

சுக்­கிரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள் 3, 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)