" இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23-05-2018)..!

Published on 2018-05-23 08:53:27

23.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச நவமி திதி முன்­னி­ரவு 10.29 வரை. அதன் மேல் தசமி திதி. பூரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.00 வரை. பின்னர் உத்­திரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை, நவமி. அமிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு. (பரி­காரம்– பால்) தனிய நாள் சுபம் விலக்­குக.

மேடம் : உற்­சாகம், வர­வேற்பு

இடபம் : சினம், பகை

மிதுனம் : முயற்சி, முன்­னேற்றம்

கடகம் : தெளிவு, அமைதி

சிம்மம் : சிக்கல், சங்­கடம்

கன்னி : பக்தி, அனுக்­கி­ரகம்

துலாம் : அமைதி, நிம்­மதி

விருச்­சிகம் : சாந்தம், தெளிவு

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : நற்­செயல், பாராட்டு

மீனம் : ஆக்கம், நிறைவு

இன்று பூரம் நட்­சத்­திரம். அம்­பிகை ஆதி­ப­ரா­சக்தி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவாள். நம் பண்டைத் தமி­ழர்கள் குன்று மலை நாட்டின் கண் முரு­க­னா­கவும், கார்செய் காலத்­தி­டையே திரு­மா­லான விஷ்­ணு­வையும், வளம் சேர் மருத நிலத்தில் சிவ­னா­கவும், கடல் சூழ் பகு­தியில் வரு­ண­னா­கவும், வன­மாநிய பாலை நிலக்­க­ட­வு­ளாக கொற்­றவை காளி­யையும் வழி­பட்டு வந்­தனர். இதை தமிழின் முதல் நூல் தொல்­காப்­பியம் கூறு­கின்­றது. வீரத்தின் வெற்­றிக்­க­ட­வு­ளாகக் குறிப்­பிடும் காளியை இன்று வழி­படல் நன்று. இவள் தீமையை அழித்து நன்­மையைக் காப்­பவள். துஷ்ட நிக்­ரக சிஷ்­ட­ப­ரி­பா­லனம் துக்க நிவா­ரணி என்­பதே இதன்­பொருள்.   (“உன்னில் நீ திருப்­தியைத் தேடு. அதை வெளியில் தேடு­வது பய­னற்­றது”)

புதன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9 

பொருந்தா எண்கள்: 6, 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல் நிறங்கள், மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)