01.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 18 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

2016-03-01 08:42:48

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி பிற்­பகல் 1.04 வரை. பின்னர் அஷ்­டமி திதி. அனுஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.53 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. அஷ்­டமி சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரனி. சுப நேரங்கள் காலை 10.30 –11.30, மாலை 4.30 – 5.30. ராகு­காலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வார சூலம் – வடக்கு (பரி­காரம் பால்). 

மேடம் : அன்பு, ஆத­ரவு

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் :வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : தடை, தாமதம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : வரவு, இலாபம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய திரு­மலை பாசுரம் 31. “தவத்­துள்ளார் தம்­மில்லேன். தனம் படைத்­தா­ரில்லேன். அவத்­தமே பிறவி தந்தாய் அரங்­கமா நக­ரு­ளானே” பொரு­ளுரை: திரு­வ­ரங்­கத்தில் சய­னித்­தி­ருப்­ப­வனே! உன்னை அடையத் தவம் புரி­ப­வர்­களில் ஒரு­வ­னல்லேன். செல்­வந்­த­னாக இருந்தால் தானம் செய்­தி­ருப்பேன். அதற்கும் தகுதி இல்லை! உப்பு நீர் போல சுற்­றத்­தா­ருக்கு உத­வா­த­வ­னா­கி­விட்டேன். சிவந்த வாயை­யு­டைய நங்­கை­ய­ருக்கும் கள்­வ­னானேன். எனக்கு நீ அளித்த பிறவி வீணாகிவிட்­டது. அரங்­க­மா­ந­க­ருள்­ளானே! (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்) (“ஒரு பள்­ளிக்­க­தவு திறக்­கப்­படும் போது சிறைச்­சாலை கதவு மூடப்­ப­டு­கின்­றது) சூரியன், ராகு கிர­கங்­களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right