"மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21-05-2018)..!

Published on 2018-05-21 08:25:57

21.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 7 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 2.20 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.19 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­த­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30 – 5.30. ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளி­கை­காலம் 1.30 – 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம் – தயிர்) கரிநாள் சுபம் விலக்­குக. சோமாசி மாறனார் நாயனார் குரு­பூஜை. 

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : களிப்பு, கொண்­டாட்டம்

மிதுனம் : சினம், பகை

கடகம் : அசதி, வருத்தம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : அன்பு, பாசம்

துலாம் : நிறைவு, பூர்த்தி

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : காதல், பாசம்

“ஸ்ரீ வெங்­க­டேஷ சுப்­ர­பாதம். “ஈஷத் ப்ரபுல்ல ஸர­ஸீ­ருஹ நாரி­கேய பூகத்ரு மாதி ஜும நோஹர பாரிக்கா நாம்! ஆவா­தி­மந்த மநிலஸ் திவ்­ய­கந்தை சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்­ர­பாதம். திரு­வேங்­க­டவன் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி” வர­வ­ஹிந்து கதி­ர­வனை மலர்ந்­திடும் தாம­ரையும் பரி­ம­ளமும் பாக்கும் தென்­னையும் மற்றும் பல பெரும் பேராய் வீசு­கின்ற தென்­ற­லை­ய­றிந்து நீ வேங்­க­டத்தின் பெரு­ம­கனே திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய். (தொடரும்)

குரு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 1, 5

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)