"ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தரமாய் இருப்பதே அழகு...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18-05-2018)..!

Published on 2018-05-18 09:14:44

18.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 4 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி பகல் 11.50 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. மிருக சீரிடம் நட்­சத்­திரம் காலை 7.41 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. சதுர்த்தி, சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: கேட்டை. சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 5.00– 6.00, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு. (பரி­காரம்– வெல்லம்) சதுர்த்தி விரதம். 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : திறமை, முன்­னேற்றம்

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : தடை, இடை­யூறு

கன்னி : சலனம், சஞ்­சலம்

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : ஆக்கம், திறமை

தனுசு : பணம், பரிசு

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : உதவி, நட்பு

 

ஸ்ரீ வெங்­க­டேஸ சுப்­ர­பாதம் “தவ ஸுப்ர பாத மர­விந்த லோசநே பவது பிர­ஸந்த முக சந்­ர­மண்­டலே! விதி சங்­க­ரேந்­தர வனிதா பிரர்ச்­சிதே! வ்ருஷ சைல நாத தயிதே தயா­நிதே” திரு­வேங்­கடம் உடையான் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. மதி­மு­கமும் மலர் விழியும் கொண்ட லக் ஷ்மி தாயே! துதி செய்யும் அயன், அரன், அம­ரேந்­திரன் துணை­களும் தொழுது மதித்­திடும் திரு­வேங்­க­டவன் அன்பே! அன்­னையே! உதித்­தது ஞாயிறு திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்… (தொடரும்)

இம்­மாதம் இரண்டு அமா­வாஸ்யை கொண்டு மல­மா­த­மாக இருந்­தாலும் சித்­திரை, வைகாசி வசந்தருது­விற்கு மல மாத தோஷ­மில்லை என காலப் பிர­கா­சிகை, கால விதானம் போன்ற அரிய ஜோதிட நூல்­களில் கூறப்­பட்­டுள்­ளது. சுப­கா­ரி­யங்கள் செய்ய எந்­த­வித தடை­யு­மில்லை. இது ஸ்ரீமன் நாரா­ய­ணனால் உல­குக்கு அளிக்­கப்­பட்ட நியதி. ஆதாரம்: ஜகத் சிருஷ்டி ஜாதகம் சர்வ முகூர்த்­த­நாடி.

செவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 8

பொருந்தா எண்கள் :7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)