"எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்." : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்..!

Published on 2018-05-13 10:48:49

13.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 30 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி முன்னிரவு 8.37 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.15 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. திரயோதசி அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம். உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.00 –4.30 ராகுகாலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம்– மேற்கு (பரிகாரம் –வெல்லம்) ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்.

மேடம் : புகழ், பெருமை

இடபம் : கீர்த்தி, புகழ்

மிதுனம் : சுபம், மங்களம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : அன்பு, சாந்தி

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் : வரவு, இலாபம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : கோபம், சினம்

கும்பம் : திறமை, முன்னேற்றம்

மீனம் : அன்பு, பாசம்

இன்று மாத சிவராத்திரி கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம். தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு  ஆலயத்தில் பகல் அபிஷேகம், தீபராதனை, அன்னதானம். பிரதோஷம் என்றால் நம் குற்றங்கள் குறைகள் விலகுவது என்று பொருளாகும். மாலை வேளையில் சிவ வழிபாடுகளில் கலந்து கொள்வது வாழ்வில் முக்கிய ஏற்றங்களை  ஏற்படுத்தும்.

(“முட்டாள் என்பவன் யார் தெரியுமா? தன் வியாதிக்காக மருத்துவரிடம் சென்று தன் சொத்துக்களுக்காக அவரையே வாரி சாக்கின்றானே அவன் தான்” –பெஞ்சமின் பிராங்க்லின்)

ராகு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)