"வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும் வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்..!

Published on 2018-05-11 08:36:57

11.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 28 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி முன்­னி­ரவு 9.24 வரை. அதன்மேல் துவா­தசி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 11.12 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் : மகம், பூரம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்)

மேடம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : கோபம், அவ­மானம்

சிம்மம் : வெற்றி, யோகம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பயம், விரோதம்

விருச்­சிகம் : விரயம், செலவு 

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : புகழ், பாராட்டு

இன்று கிருஷ்­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். உப­வா­ஸ­மி­ருந்து நாரா­ய­ணனை வழி­ப­டுதல் நன்று. இந்த பிர­பஞ்சம் தோன்­று­வ­தற்கும் அது நிலை பெறு­த­லுக்கும் நீக்­க­லுக்கும் கார­ண­மா­னவன் நாரா­யணன் ஒரு­வனே. அவனே நித்யம். அவன் ஒரு­வனே சத்யம். எல்­லா­வற்­றிற்கும் ஆதா­ர­மா­னவன், இயக்­கு­பவன், ரட்­சிப்­பவன். இவ்­வு­ல­கையே தனக்கு சரீ­ர­மாக கொண்­டவன். வேதத்­தினால் போற்­றப்­ப­டு­பவன் வேதாந்­தங்­களில் காட்­டப்­ப­டு­பவன். மோட்­சத்தைக் கொடுப்­பவன். வாத்­ஸல்யம், சுவா­மித்வம் போன்ற கல்­யாண குணங்­களை உடை­யவன். ஆதலால் எம்­பெ­ருமான் என்ற சொல்­லுக்கு அர்த்­த­முள்­ள­வ­னாக விளங்­கு­கின்றான். 

சந்­திரன், செவ்வாய்க் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  7, 5, 6

பொருந்தா எண்கள்:  2, 9, 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)