"கிடைக்கும் போதே பயன்படுத்து.! இருக்கும் போதே அனுபவி.!" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்..!

Published on 2018-05-10 08:33:08

10.05.2018 விளம்பி வருடம் சித்­திரை 

மாதம் 27 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 9.02 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. சதயம் நட்­சத்­திரம் காலை 9.57 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை தசமி. மர­ண­யோகம் காலை 9.57 வரை. அதன்மேல் சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, பிற்­பகல் 12.30– 1.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் : இன்பம், மகிழ்ச்சி

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம்                : செலவு, விரயம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : சிரமம், தடை

கன்னி : பொறுமை, நிதானம்

துலாம் : விவேகம், வெற்றி

விருச்­சிகம் : நஷ்டம், கவலை

தனுசு : தோல்வி, கவலை

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : தடை, இடை­யூறு

மீனம் : இலாபம், லஷ்­மீ­கரம்

“உல­கமே என் தாய் நாடு. நன்மை செய்­வதே என் சமயம்” தாமஸ்­பெயின். இதனை நம் இந்­து­மதம் “உலகம் உவப்ப” என்று திரு­மு­ரு­காற்­றுப்­ப­டையும், “நனந்­தலை உலகம்” என்று முல்­லைப்­பாட்டும், “வையகம்” என்று நெடு­நல்­வா­டையும், “வையம் தக­ளியா” என்று முத­லாழ்வார் பாசு­ரமும் வையத்து வாழ்வீர் காண் என்று ஸ்ரீஆண்டாள் திருப்­பா­வையும், “ஆதி­ப­கவன் முதற்றே உலகு” என்று திருக்­கு­றளும், "உலகம் யாவையும்" என்று கம்­பரும் “உல­கெலாம் உணர்ந்து ஓது­தற்­க­ரி­யவன்” என்று சேக்­கி­ழாரும், “உலகு ஏழும் பெற்ற சீர­பி­ராமி” என்று அபி­ராமி அந்­தா­தியும் தொடங்­கு­கின்­றது. தமிழ் இலக்­கி­யங்­களின் தலை­யாய பண்­புகள் இரண்டு. அவை உல­க­ளா­விய நோக்கில் தமிழை அணு­கு­வது (International Perspective) மற்­றது அறி­வியல் நெறி­முறை (Scientific Approach) இந்த சிறப்பு நம் தமிழை விட வேறு எந்த மொழி­யாலும் விவ­ரிக்க முடி­யாது. (சொல்லிக் கொடுத்த காளிக்கு நன்றி)

சூரியன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :  1, 5

பொருந்தா எண்கள் :  8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)