புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை!!

Published on 2018-05-08 10:04:50

08.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 25 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி மாலை 6.50 வரை. அதன் மேல் நவ­மி­ திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் காலை 6.09 வரை. அதன் மேல் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. அஷ்­டமி. அமிர்த சித்­தி­யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூசம். சுப­நே­ரங்கள் காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30,  எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) நாளை திரு­நா­வுக்­க­ரசர் நாயனார் குரு­பூஜை.

மேடம் : தடை, தாமதம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : முயற்சி, முன்­னேற்றம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : ஓய்வு, அசதி

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : உதவி, நட்பு

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : சிரமம், தடை

மீனம் : சுகம், இன்பம்

இன்று மாலை தெஹி­வளை, ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் ராகு­கால துர்க்கைப் பூஜை. "அடர்த்­தெழு குரு­தி­ய­டங்கா பசுந்­துணிப் படர்ந்­தலைப் பீட­மே­றிய படர்க்­கொடி, வெற்­றிவேல் தடக்கை சிலம்பும் கழலும் புலம்­புஞ்­சீ­ரடி வலம்­படு கொற்­றத்து வாய்­வாட்­கொற்­றவை என்று சிலப்­ப­தி­கா­ரமும் மறங்­கடை கூட்­டிய குடி­நிலை சிறந்த கொற்­றவை நிலையும் அத்­தினைப் புறனே” என்று நம் தமி­ழரின் பழம்பெரும் நூலான தொல்­காப்­பி­யத்­தையும் அடி­யே­னுக்கு ஏழு வயதில் சொல்லிக் கொடுத்த திரு­கோ­ண­ம­லைக்­கா­ளிக்கு என் தமிழை சமர்ப்­பிக்­கின்றேன்.

(“குழந்தைப் பருவம், ஆகா! வாழ்க்­கையின் விடி­யற்­காலம் அல்­லவா அது!”) 

சனி, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண் : 6

பொருந்தா எண்கள் : 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)