செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்

Published on 2018-05-07 11:39:31

07.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 24 ஆம் நாள் திங்கட்கிழமை.

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி மாலை 5.09 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி: தேய்பிறை, ஸப்தமி. அமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: புனர்பூசம். சுபநாள். சுபநேரங்கள்: காலை 6.00– 7.00, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம்– கிழக்கு.(பரிகாரம்– தயிர்). நட்சத்திர திருதியை பிருக்கு. திருவோண விரதம். காலை நடராஜர் அபிஷேகம்.

மேடம் : இலாபம், லக் ஷ்மீகரம்

இடபம் : பணிவு, பாசம்

மிதுனம் : அன்பு, இரக்கம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : பிரயாணம், அசதி

கன்னி : உதவி, நட்பு

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்சிகம் : பகை, விரோதம்

தனுசு : சினம், பகை

மகரம் : நோய், வருத்தம்

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : தனம், சம்பத்து

இன்று திருவோணம் நட்சத்திரம். திரு

வோண விரதம். உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கும் நிறை பெறுவ

தற்கும் நீக்கலுக்கும் காரணமானவன் ஸ்ரீமன் நாராயணனே. எங்கும் நிறைந்தி ருப்பவன் அவனே நித்யம். அவனே சத்யம். விஷ்ணு என்றால் எங்கும் வியாபித் திருப்பவன் என்று பொருள். இன்று விஷ் ணுவை வழிபடல் நன்று.

(“வழக்கம் என்பது முதலில் ஒட்டடை, பிறகு இரும்புச் சங்கிலி”)

கேது, புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)