28.02.2016 மன்மத வருடம் மாசி 16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

Published on 2016-02-27 08:45:10

 

கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி காலை 9.46 வரை. அதன் மேல் சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் முன்னிரவு 7.49 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் கரிநாள் (சுபம் விலக்குக) சமநோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்தரட்டாதி ரேவதி சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30 வாரசூலம் –மேற்கு (பரிகாரம்– வெல்லம்)

.

மேடம் : கவலை, கஷ்டம்

இடபம் : வரவு, லாபம்

மிதுனம் : தடை, தாமதம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : அன்பு, ஆதரவு

கன்னி : அசதி, வருத்தம்

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் : வருத்தம், கவலை

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : அமைதி, சாந்தம்

கும்பம் : செலவு, பற்றாக்குறை

மீனம் : பகை, பயம்

தொண்டரடிப் பொடியாள்வார் அருளிய “திருமாலை” “பாசுரம் 29” ஊரிலே காணி இல்லை. உறவு மற்றொருவரில்லை. பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே கதருகின்றேன். ஆருளர் களை கண்? அம்மா அரங்கா மாநகருளானே! பொருளுரை மோட்சம் கொடுக்கும் ஸ்ரீ சவுத்திரராமர் திருப்பதி போன்ற ஊர்களில் பிறக்கும் பாக்கியம் பெறவில்லை. கோவில் கைங்கர்யம் செய்ய காணி நிலங்களுமில்லை. உறவு என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் கிடையாது. உன் திருப்பாதங்களை சரணடையும் புத்தியும் இல்லை. கார்மேகம் போன்ற நிறமுடைய துவாரகா நிலை வாசா கண்ணா அனைவருக்கும் தலைவனே! என்னைப் பெற்றவனே ரங்க நாதா உன்னையன்றி என்னைப் பாதுகாக்க எவர் உள்ளார்? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சூரியன் குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளம் சிகப்பு