07.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2015-12-07 11:28:30

கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி பகல் 11.13 வரை. அதன் மேல் துவாதசி திதி சித்திரை நட்சத்திரம் முன்னிரவு 7.35 பின்னர் சுவாதி நட்சத்திரம் முன்னிரவு 9.54 பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி சித்தாமிர்த யோகம். சம நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 7.30 – 9.00. எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : பிரயாணம், அசதி

இடபம் : அமைதி, நிம்மதி

மிதுனம் : வெற்றி, யோகம்

கடகம் : சுகம், ஆரோக்கியம்

சிம்மம் : லாபம், லஷ்மீகரம்

கன்னி : உழைப்பு, உயர்வு

துலாம் : நலம், ஆரோக்கியம்

விருச்சிகம் : உதவி, நட்பு

தனுசு : காரியசித்தி, அனுகூலம்

மகரம் : சிக்கல், கவலை

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் : தேர்ச்சி, புகழ்

இன்று சுபமுகூர்த்த நாள். கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். உபவாசமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவதால் சகல பாவங்களிலும் இருந்து விடுபட்டு நற்கதி கிட்டும் சுவாதி நட்சத்திர தினமான இன்று ஸ்ரீ நரசிங்ஹ பெருமாளை வழிபடல் சாலச்சிறந்தது.

(“சான்றோரிடம் காணப்படாதவை நான்கு. ஆராயாமல் வெறுத்தல். ஆதாரமின்றி முடிவு செய்தல். பிடிவாதம், ஆணவம். தன்னைத்திருத்திக் கொண்டவனே மற்ற மனிதரையும் அறிவு புகட்டி வல்லவனாவான்”)

கேது, செவ்வாய்க்கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 6

பொருந்தா எண்கள்: 7 – 8 – 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)