“புத்­தி­சாலி தன்­னையே கேள்வி கேட்டுக் கொள்­கிறான். முட்டாள் மற்­ற­வர்­களைக் கேள்வி கேட்­கிறான்”

Published on 2018-04-23 09:35:27

23.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 10 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி மாலை 4.10 வரை. அதன் மேல் நவமி திதி. பூசம் நட்­சத்­திரம் மாலை 6.42 வரை. பின்னர்  ஆயில்யம் நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளி­கை­காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு. (பரி­காரம் – தயிர்) வாஸ்து நாள் – வாஸ்து நேரம் காலை 8.54 – 9.30, மனை ஆலயம், கிணறு முத­லி­யன வாஸ்து செய்தல் நன்று. தியாகப் பிரம்மம் ஜனனம்.  

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : பக்தி, அனுக்­கி­ரகம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : அன்பு, நேசம்

துலாம் : தடை, தாமதம்

விருச்­சிகம் : ஆதாயம், இலாபம்

தனுசு : வீம்பு,  சச்­ச­ரவு

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : ஜெயம், புகழ்

மீனம் : புகழ், பாராட்டு 

இன்று பூசம் நட்­சத்­திரம் தேவ­குரு எனப் போற்­றப்­படும் பிர­கஸ்­பதி இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். ஒரு மனிதன் வாழ்வில் சதுர்­வித புரு­ஷாத்தம் என்று கூறப்­படும் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் இவற்றைப் பெற குரு­ப­கவான் வழி­பாடு அவ­சியம். இன்று குருவை வழி­ப­டு­வதால் இவற்றைப் பெறலாம்.

(“புத்­தி­சாலி தன்­னையே கேள்வி கேட்டுக் கொள்­கிறான். முட்டாள் மற்­ற­வர்­களைக் கேள்வி கேட்­கிறான்”) 

புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல், இலேசான பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)