துலாம் ராசியினருக்கு இன்று புகழ்! சிம்மம், மிதுனம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்படும்..?

Published on 2018-04-12 08:51:40

12.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 29 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி காலை 7.29 வரை. அதன்மேல் துவா­தசி திதி.  சதயம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.33 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. துவா­தசி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30 பிற்­பகல் 12.30– 1.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– வெல்லம்) ஸர்வ ஏகா­தசி  விரதம். விஜயா ஏகா­தசி விரதம். ஸ்ரீமன் நாரா­ய­ணனை உப­வா­ஸ­மி­ருந்து வழி­படல் நன்று. தண்­டியார் நாயனார் குரு­பூஜை.

மேடம் : நட்பு, உதவி

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : நிறைவு, ஆக்கம்

கடகம் : தேர்ச்சி, புகழ்

சிம்மம் : திறமை, ஆர்வம்

கன்னி : நன்மை, யோகம்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : அமைதி, சாந்தம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : விருத்தி, மேன்மை

மீனம் : அன்பு, பாசம்

நாளை காலை முதல் தெஹி­வளை நெடுமால் ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணுமூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அடி­ய­வர்கள் மருத்து நீரை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். நாளை மறு­தினம் சித்­திரை தமிழ் வரு­டப்­பி­றப்பு. வசந்­த­காலம் என்னும் இள­வேனில் காலம் தொடங்­கு­கி­றது. குயில்கள் கூவு­கின்­றன. மாந்­தளிர் செழித்து, வேப்பம் பூ பூத்து குலுங்கும் காலம் இது. இன்று சமை­யலில் வேப்பம் பூ பச்­சடி, மாங்காய் பச்­சடி, வடை, பருப்பு, நீர் மோர், பருப்பு பாயாசம் சேர்ப்­போ­மாக.

குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 3

பொருந்தா எண்கள்: 6, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)