மனிதன் உண்­மை­யா­கவும் நேர்­மை­யா­கவும் இருந்தால் உலகில் யாருக்கும் பயப்­பட வேண்­டி­ய­தில்லை.

Published on 2018-04-10 09:25:24

10.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 27 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச தசமி திதி நாள் முழு­வதும். திரு­வோணம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.54 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளி­கை­காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) திதி திரி­தினஸ் பிருக்கு திரு­வோண விரதம்.  

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : ஆர்வம், முன்­னேற்றம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : புகழ்,பெருமை

விருச்­சிகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் :நம்­பிக்கை, காரி­ய­சித்தி

விளம்பி வருடம் நவ­நா­ய­கர்கள் உப நாய­கர்கள். ராஜா சூரியன். குதிரை உப­நா­யகர். உலகில் பல இடங்­களில் ஆட்சி மாற்றம். கோடை காலத்தில் அதிக வெயிலும் குளிர்­கா­லத்தில் அதிக  குளிரும் ஏற்­படும். மந்­திரி சனி பொது­மக்களுக்கு நோய்­களும் அதிக விபத்­து­களும் ஏற்­படும். சேனா­தி­பதி சுக்­கிரன் வெளி­நா­டு­களில் போர் பதற்றம் ஏற்­படும். அர்க்­கா­தி­பதி சுக்­கிரன். சங்­கீ­தம் கலை பெருகும். (தொடரும்)

சூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், பொன்னிறம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)