இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வெடுக்க முடியும்

Published on 2018-04-02 10:35:27

02.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 19 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி மாலை 5.56 வரை. அதன் மேல் திரி­தியை திதி. சித்­திரை நட்­சத்­திரம் காலை 6.49 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம், சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை சித்­தா­மிர்­த­யோகம். கரிநாள் சுபம் விலக்­குக. சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள்: காலை 6.30–7.30, மாலை 4.30–5.30, ராகு­காலம் 7.30–9.00, எம­கண்டம் 10.30–12.00, குளி­கை­காலம் 1.30– 3.00. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்). காரைக்­கால் அம்­மையார் குரு­பூஜை. சிவ­பெ­ரு­மானால் அம்­மையே என்று போற்றி அழைக்­கப்­பட்­டவர்.

மேடம் : அமைதி, நிம்­மதி

இடபம் : அன்பு, ஆத­ரவு 

மிதுனம் : ஆக்கம், நிறைவு

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : ஈகை, புண்­ணியம்

கன்னி : உண்மை, உயர்வு

துலாம் : ஊக்கம், முன்­னேற்றம்

விருச்­சிகம் : எண்ணம், காரி­ய­சித்தி

தனுசு : ஏக்கம், கவலை

மகரம் : ஓய்வு, வருத்தம்

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : நினைவு, கவலை

“ஆதி ரேகை சாஸ்­திரம்” புத்­திர பாக்­கி­யமும் பெற்­றோர்க்கு களிப்பும் புத்­திர ரேகையும் ஜோதிட சாஸ்­தி­ரமும் கலந்து எழு­து­கின்றேன். “தன்­னையின் வயிற்றில் நின்று தனித்­திடும் காலம் தொட்டு துள்­ளிய குழந்தை ஆண்டு துடி­பதி மூன்று மட்டும் பள்­ளியின் பாலர் அன்னார் பச்­சிளம் கரத்தில் தோன்றும் பிள்­ளையின் அதிர்ஷ்­ட­மெல்லாம் பெற்­றவர் கணிக்கும் தானே” ஓர் அன்­னையின் வயிற்றில் கரு உரு­வாகத் தோன்றி குழந்தை அது ஜெனிக்கும் காலம் வரை கிர­கங்­களின் ஆதிக்கம், கர்ப்ப வாசப் பிரச்­சி­னை­களைத் துல்­லி­ய­மாக தொடர்ந்து எழு­து­கின்றேன். ஒவ்­வொரு மாதமும் கர்ப்­பி­ணித்தாய் எவ்­வாறு தன்­னையும் வயிற்றில் வளரும் சிசு­வையும் பாது­காத்துக் கொள்ளல் வேண்டும் என்­ப­தையும் தொடர்ந்து எழு­து­கின்றேன். (“அமை­தியும் மெள­னமும் அறி­விற்கு அழகு, பொறுமை திற­மைக்கு ஏற்­றது” – கவி காளி­தாசன்)

சந்­திரன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்: 7, 1, 5, 6 

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)