“தூய்மையான மனச்சாட்சி இடி முழக்கத்திலும் அச்சமின்றி துயிலும்”

Published on 2018-04-01 11:43:45

02.03.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

பௌர்ணமி திதி காலை 7.00 மணி வரை. அதன் மேல் பிரதமை திதி பின்னிரவு 5.34 வரை. பின்னர் துவிதியை திதி. திதி அவமாகம். பூரம் நட்சத்திரம் முன்னிரவு 11.20 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. சித்தயோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம் சுபநேரங்கள் காலை 9.30–10.30. மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00–4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம்-– மேற்கு (பரிகாரம்-– வெல்லம்) 

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : லாபம், லக்ஷ்மீகரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : தடை, இடையூறு

துலாம் : மகிழ்ச்சி, சந்தோசம்

விருச்சிகம் : லாபம், ஆதாயம்

தனுசு : தடை தாமதம்

மகரம் : சிக்கல், சங்கடம்

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் : அன்பு, பாசம்

பால்குண பகுளப் பிரதமை. மாசி மகத்தை தொடர்ந்து இன்று சமுர்த்திர ஸ்நனாம் செய்தல் நன்று. பூரம் நட்சத்திரம் பூமி தேவியின் அம்சமாக கலியுகத்தில ஆண்டாள் அவதரித்தது. இந் நட்சத்திரத்தில் மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே! வன்புதுவை நகர் கோதை மலர் பதங்கள் வாழியே! இன்று ஸ்ரீ ஆண்டாள் தாயாரை வழிபடுதல் நன்று.

(“தூய்மையான மனச்சாட்சி இடி முழக்கத்திலும் அச்சமின்றி துயிலும்” – தாமஸ் முல்லர்)

சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)