மூட­னுக்கு அறி­வுரை கூறினால் நமக்­குத்தான் கேடு வரும்.!

Published on 2018-03-28 09:01:53

28.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 14 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 10.43 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் காலை 9.15 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை துவா­தசி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) வாமனத் துவா­தசி.

மேடம் : பகை, எதிர்ப்பு

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம்          : விவேகம், வெற்றி

கடகம் : அச்சம், பகை

சிம்மம் : பிர­யாணம், அசதி

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : வீம்பு, சச்­ச­ரவு

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : ஆசை, மகிழ்ச்சி

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : நலம், ஆரோக்­கியம்

துர­திர்ஷ்ட ரேகையும் அதன் அதி­கா­ரமும், “காவி நல்­வாழ்க்கை கூறும் கணித வல்­லவர் தமக்கு பூவை பொன்­மேட்டின் கீழ் பொளி­யென அடியாய்த் தொட்டு ஏவி நூற்­றி­ருப்­பத்தைத் தாண்டி எழு­பது வயது கொண்ட ஈவு துர்­அ­திர்ஷ்டம் காட்டும் இத­யாயுள் ரேகை­தானே” ஒருவர் இரு­தய ரேகையை அதன் மேடு­களின் கணித காலத்தை அனு­ச­ரித்து அவை 120 வயது காலக் கணி­தத்தை கணித்தால் அவ்­ரே­கை­களில் தோன்றும் அழிவு, தீவு, தடை, பிளவு, பிரிவு, பின்னல், முறிவு குறி­களைக் கொண்டு துர­திர்ஷ்­டங்­களை கணித்து ரேகை பலன் சொல்­லலாம்.

சூரியன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)