26.02.2016 மன்மத வருடம் மாசி 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-02-26 07:27:28

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி நாள் முழுவதும். திதி திரிதியைப் பிருக்கு அஸ்தம் நட்சத்திரம் பிற்பகல் 2.48 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தி. அமிர்தசித்தயோகம். சுப முகூர்த்த நாள். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30–.5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம் மேற்கு (பரிகாரம் –வெல்லம்.) கிருஷ்ண பட்ச சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

மேடம்: காரியசித்தி, அனுகூலம்

இடபம்: நற்செயல், செல்வாக்கு

மிதுனம்: சினம், பகை

கடகம்: கவனம், எச்சரிக்கை

சிம்மம்: பணம், வரவு

கன்னி: அன்பு, பாசம்

துலாம்: நலம், ஆரோக்கியம்

விருச்சிகம்: அமைதி, நிம்மதி

தனுசு: வரவு, லாபம்

மகரம்: லாபம், லஷ்மீகரம்

கும்பம்: பக்தி, ஆசி

மீனம்: அன்பு, பாசம்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய "திருமாலை" "பாசுரம் 27" "குரங்குகள் மலையை தூக்க குளித்துத் தாம் புரண்டிட்டோடி தரங்க நீரடைக்கலுற்ற சலமியா அனியம் போலேன். " பொருளுரை: வானர வீரர்கள் குரங்குகள் மலையை தள்ளிக்கொண்டு ஸ்ரீ இராமன் இலங்கை வர பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அணில்கள் கூறிற்று "இந்த குரங்குகளுக்கு கட்டிட கலையே தெரியாது. வெறும் கற்களை மட்டும் அடுக்குவதால் பாலம் அமையுமா? கற்களுக்கு இடையில் சாந்து பூச வேண்டாமா?" என்று கூறி கடல் நீரில் குளித்து மணலில் புரண்டு ஓடி மணலை கற்களுக்கு இடையில் தூர்த்து ஸ்ரீராம கைங்கர்யம் செய்தன. ஸ்ரீராமரும் மகிழ்ச்சியுடன் அணில்களின் முதுகில் தடவ இன்றும் ஸ்ரீராமரின் கை விரல் அடையாளங்களே அணில்களின் முதுகில் மூன்று கோடுகளாக பதித்துள்ளன. ஆனால் நானோ ஸ்ரீரங்கநாதனுக்கு தொண்டு செய்யாமல் அர்த்தமற்றவளாய் வாழ்கின்றேனே. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“ஒரு மனிதனிடம் அகம்பாவம் வேர் முளைக்க துவங்கி விட்டதோ அப்போதே அவன் செயலற்று போகிறான்.”) 

சனி, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 1, 5,6

பொருந்தா எண்கள்:  7, 8

அதிர்ஷ்ட வர்ணம்:  மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)