25.02.2016 மன்மத வருடம் மாசி 13 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-02-25 07:46:01

கிருஷ்ணபட்ச திரிதியை திதி பின்னிரவு 5.37 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்தரம் நட்சத்திரம் பகல் 12.17 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. மரண யோகம் 12.17 வரை பின்னர் சித்த யோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சேத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் காலை 10.30– 11.30, பகல் 12.30.1.30, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம் தெற்கு (பரிகாரம் –தைலம்.)

மேடம்: நன்மை, யோகம்

இடபம்: வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்: செலவு, விரயம்

கடகம்: அமைதி, தெளிவு

சிம்மம்: தனம், பரிசு

கன்னி: கவனம், எச்சரிக்கை

துலாம்: கீர்த்தி, புகழ்

விருச்சிகம்: நஷ்டம், கவலை

தனுசு: நிறைவு, பூர்த்தி

மகரம்: பாராட்டு, புகழ்

கும்பம்: லாபம், லஷ்மீகரம்

மீனம்: தெளிவு, அமைதி

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 26 ' போ தெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன் தீதில்லா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்பமாட்டேன் காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஓதிலேன் அரங்கர்க்கு எல்லை! என் செய்வான் தோன்றினேனே? பொருளுரை: எல்லாக் காலங்களிலும் பூக்களால்  உன் பொன்னடிகளை பூஜிக்க முடியவில்லை. குற்றமற்ற சொற்களால் உன் கல்யாண குணங்களைப் பாடமுடியவில்லை உருகும் பக்தியால் வரும் நேசத்தை நெஞ்சில் நினைக்கத் தெரியவில்லை ஸ்ரீரங்கநாதா! கை, கால், வாய், செவி, கண் என்று உறுப்புகள் பூரணமாக இருந்தாலும் உனக்காக அவற்றைப் பயன் படுத்த முடியாத நான் எதற்காக பிறந்தேன்? (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(“மாற்று வழியை கண்டு பிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்.”) 

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்: 5, 6

பொருந்தா எண்கள்:  7, 8,2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்,

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)