24.02.2016 மன்மத வருடம் மாசி 12 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-02-24 07:40:00

கிருஷ்ணபட்ச துவிதியை திதி பின்னிரவு 3.37 வரை. அதன் மேல் திரிதியை திதி பூரம் நட்சத்திரம் காலை 9.59 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை அமிர்த யோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம் சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரிகாரம் –பால்)

மேடம்: அன்பு, பாசம்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: தனம், லாபம்

சிம்மம்: யோகம், அதிர்ஷ்டம்

கன்னி: விவேகம், வெற்றி

துலாம்: சுபம், மங்கலம்

விருச்சிகம்: புகழ், பெருமை

தனுசு: உழைப்பு, உயர்வு

மகரம்: தொல்லை, சங்கடம்

கும்பம்: புகழ், பாராட்டு

மீனம்: ஏமாற்றம், கவலை

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 25 'குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன். என் கணில்லை நின் கனும் பத்தனல்லேன் களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன் அளித்தெனக் கருள் செய் கண்டாய் அங்க மா நகருளானே!' பொருளுரை திருவரங்கத்தில் கோயில் கொண்டவனே குளித்து காருக பத்தியம், ஆகவ நீயம், தட்சினாக்கினி என்ற மூன்று அக்கினிகளை வளர்ப்பதற்குரிய தகுதியை உடையதான பிரம்மணியத்தை போக்கடித்துக் கொண்டேன். ஆத்ம ஞானமும் என்னிடமில்லை. உன்னிடம் மனம் ஒன்றிய பக்தியும் வரவில்லை. இப்படிப்பட்ட நான் எப்படி சந்தோசப்படுவது? கடல் நிறம் கொண்ட துவாரஹா ஈசனே ‘கதறி இறைஞ்சுகின்றேன் என்னை உன் அடியவனாக்கி சகலமும் அளித்து அருள் புரிய வேண்டும் திருவரங்க நாதனே'. 

(“தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்”) 

சுக்கிரன் சனிக் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)