“உன் சொத்­துக்கள் எல்லாம் உன்­னு­டை­யவை என்றால், அடுத்த பிற­விக்கு அவற்றை உன்­னுடன் எடுத்துச் செல்­வ­து­தானே?

2018-03-06 09:06:27

06.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 4.28 மணி­வரை. அதன் மேல் சஷ்டி திதி. சுவாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.19 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: காலை 10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00–10.30, குளி­கை­காலம் 12.00–1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் பகல் 10.06 –10.42. 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம்       : அமைதி, நிம்­மதி

கடகம் : நிறைவு, மகிழ்ச்சி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : புகழ், சாதனை

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : நற்­செயல், பாராட்டு

மகரம் : முன்­னேற்றம், விருத்தி

கும்பம் : வரவு, இலாபம்

மீனம் : உயர்வு, விருத்தி

பெற்­றோர்­க­ளுக்கு பிள்­ளைகள் இறுதிக் காலத்தில் ஆற்ற வேண்­டிய மூன்று கட­மைகள் “ஜீவதோர் வாக்ய கரணாத் பிரத்­யப்தம் பூரி போஜநாத் கயாயாம் பிண்ட தாநாச்ச திரிபி புத்­ரஸ்ய புத்­ரதா” பெற்­றோர்­க­ளுக்கு பிள்­ளைகள் ஆற்ற வேண்­டியமுதற் கடமை பெற்றோர் இறந்த பின்பு அப­ர­கர்மா (இறு­திச்­ச­டங்கு) செய்தல் முதல் கடமை. இறந்த நாள் முதல் 12 நாள் வரை அபர சம்­ஸ்­கா­ரங்கள் செய்தல்2 ஆவது கடமை. பெற்றோர் பெயர், கோத்­திரம் சொல்லி விஷ்ணு பாதத்தில் நதிக்­க­ரையில் பிண்ட தானமும் கயா சிரார்த்­தமும் செய்தல் 3 ஆவது கடமை. (நாளை தொடரும்)

(“உன் சொத்­துக்கள் எல்லாம் உன்­னு­டை­யவை என்றால், அடுத்த பிற­விக்கு அவற்றை உன்­னுடன் எடுத்துச் செல்­வ­து­தானே? – பெஞ்­சமின் பிராங்­கிளின்”)

சுக்­கிரன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

பொருந்தா எண்கள்: 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right