அன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடு இருக்கும்

Published on 2018-02-27 09:21:09

25.02.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

சுக்கில பட்ச தசமி திதி மாலை 5.39 வரை. பின்னர் ஏகாதசி திதி. மிருக சீரிஷம் நட்சத்திரம் காலை 7.31 வரை. அதன் மேல் திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 5.54 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை தசமி சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) நட்சத்திர அவமாகம்.

மேடம் : அன்பு, ஆதரவு

இடபம் : சோதனை, சங்கடம்

மிதுனம் : சிரமம், கவலை

கடகம் : கவலை, சஞ்சலம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : பயம், விரோதம்

விருச்சிகம் : இலாபம், லக் ஷ்மீகரம்

தனுசு : செலவு, விரயம்

மகரம் : சுகம், இன்பம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : இன்பம், சுகம்

“அதவா புத்ர ஸந்நிதௌ” என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன் தேவையான  பணிவிடைகளை செய்து இறுதிக்காலத்தில் இறப்பவர் வாயில் பால்விட்டு அவர் தலையை தன் வலது தொடையில் வைத்துக் கொண்டு நாராயணன் நாமத்தையும் விஷ்ணு சகஸ்ர நாம மந்திரத்தையும் கூறி நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது சாஸ்திரம். ஆகவே மேற்கூறப்பட்ட இலகுவான வழியை கடைப்பிடித்து ஒருவர் தாம் இறக்கும் காலத்தில் பிள்ளைகளுடன் இருப்பது சிறந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

(“அன்புள்ள இதயம் எப்பொழுதும்  இளமையோடு இருக்கும்” – யூதர்)

கேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று:

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 9 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)