23.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-02-23 09:42:17

கிருஷ்ணபட்ச பிரதமை திதி பின்னிரவு 1.55 வரை. அதன் மேல் துவிதியை திதி. மகம் நட்சத்திரம் காலை 7.59 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை சித்தயோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம். சுபநேரங்கள் காலை 7.30– 8.30 பகல் 10.30– 11.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30.  வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்)

மேடம்: திறமை, ஆ ர்வம்

இடபம்: நஷ்டம், கவலை

மிதுனம்: சோர்வு, அசதி

கடகம்: புகழ், பாராட்டு

சிம்மம்: ஓய்வு, அசதி

கன்னி: உயர்வு மேன்மை

துலாம்: முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம்: செலவு, விரயம்

தனுசு:    ஈகை, புண்ணியம்

மகரம்: அன்பு, இரக்கம்

கும்பம்: யோகம், அதிர்ஷ்டம்

மீனம்: லாபம், லஷ்மீகரம்

தொண்ரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 24. ”வெள்ள நீர் பரத்துபாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும்கமல நன்முகமும் கண்டும் உள்ளமே வலியை போலும் ஒருவனென்று உணரமாட்டாய் கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே பொருளுரை: பெரு வெள்ளத்தைக் கொண்ட காவிரி பரந்து பாயும் படியான விசாலமான தோட்டங்களையுடைய திருவரங்கத்தில் அடியவரின் உள்ளங்களைத் திருடிக் கொண்ட கள்வனான அழகிய மணவாளன் கண் வளர்ந்தருள்வதையும் தாமரை மலர் போன்ற அவனது வதனத்தையும் சேவித்த பின்னும்மனமே! நீ கடினமாய் இருக்கின்றாய். அவன் ஈடு இணையற்றவன் என்பதை நீ உணரவில்லை! பொய்யான அன்பு கொண்டு உன் கள்ளச் செய்கையில் காலத்தை கழிக்கின்றாய்.

புதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்:     2, 1, 5

பொருந்தா எண்கள்:  8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நீலம்,மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)