22.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

2018-02-22 10:56:33

22.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி. பின்­னி­ரவு 12.09 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. பரணி நட்­சத்­திரம் பகல் 11.39 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம் பகல் 11.39 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, ராகு காலம் 2.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம் –தைலம்)

மேடம் : புகழ், சாதனை

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : சினம், பகை

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : நன்மை, நலம்

கன்னி : வெற்றி, ஜெயம்

துலாம் : பேராசை, நஷ்டம்

விருச்­சிகம் : உழைப்பு, உயர்வு

தனுசு : தனம், லாபம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : லாபம், லக்­ ஷ்­மீ­கரம்

மீனம் : அன்பு, பாசம்

மனி­தர்கள் இவ்­வு­லகில் வாழும்­போது செய்த பாவ புண்­ணி­யங்­களை ஆராய சாட்­சி­யாக 12 பேர்கள் யம­தர்ம ராஜ சபையில் அமர்ந்­துள்­ளனர். அவர்கள் தர்­மா­திபர், தநாத்­யத்ஷர், தர்­ம­ராஜர், தநஞ்­சயர், தர்­ம­குப்தர், தர்­ம­ஜீவர், தர்­மக்ஞர், தர்­ம­நந்­தனர், நீதி­மார்க்கர், அர்த்­த­வாதர், சத்­தி­யவான், ஞான­லோ­சனர் இந்த 12 பேர்கள் முன்­னி­லையில் ஜீவன் விசா­ரிக்­கப்­பட்டு ஜீவன் சுவர்க்­கத்தில் வாசம் செய்ய வேண்­டுமா? அல்­லது நர­கத்தில் வசிக்க வேண்­டுமா? அடுத்த பிறவி எங்கே என்று சித்­தி­ர­குப்தர் முடிவு எடுக்­கின்றார். நாளை தொடரும்.

ராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right