“நம் வாழ்க்கை என்னும் தேர்வில் காப்­பி­ய­டிக்க முடி­யாது. ஏனெனில் நானே எழுதி நானே விடைத்­தாளைத் திருத்­து­கின்றேன்”

2018-02-21 11:05:49

21.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 9 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச சஷ்டி விரதம் பின்­னி­ரவு 1.55 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் பகல் 12.30 வரை பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி மர­ண­யோகம். சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் –பால்) சுக்­கி­ல­பட்ச  சஷ்டி விரதம்.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : ஏமாற்றம், கவலை

மிதுனம்         : அன்பு, இரக்கம்

கடகம் : அமைதி, சாந்தம்

சிம்மம் : ஆதாயம், லாபம்

கன்னி : நிறைவு, மகிழ்ச்சி

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : நோய், வருத்தம்

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

பித்ரு லோகம் என்றால் என்ன என்­பதை அவ­தா­னிப்போம். இறந்­து­போன நமது முன்­னோர்கள் உட்­பட அனை­வரும் வாசம் செய்யும் இடமே பித்ரு லோகம் எனப்­படும். நாம் தற்­போது வசித்து வரும் பூ (மனுஷ்ய) லோகத்­திற்கும் பித்ரு லோகத்­திற்கும் இடை­வெளி இலட்­சக்­க­ணக்­கான யோஜ­னைகள். ஒரு யோஜனை என்­பது ஆயிரம் மைல்கள். இந்த லோகத்­தையே யம­லோகம் என்று கருட புராணம் தெரி­விக்­கின்­றது. இறக்கும் ஜீவன் இறு­தியில் பித்ரு லோகம் எனப்­படும் உல­கிற்கு செல்­வ­தா­கவே உப நிஷத்­துக்கள் தெரி­விக்­கின்­றன. யம­தர்ம ராஜன் சபையில் 12 பேர்கள் உள்­ளனர். அவர்கள் எம்மை விசா­ரிப்­பார்கள் அவர்கள் யார் என்­பது நாளை தொடரும்.

(“நம் வாழ்க்கை என்னும் தேர்வில் காப்­பி­ய­டிக்க முடி­யாது. ஏனெனில் நானே எழுதி நானே விடைத்­தாளைத் திருத்­து­கின்றேன்” –இங்ஸ்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right