22.2.2016 மன்மத வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-02-22 09:41:08

பௌர்ணமி திதி முன்னிரவு 12.34 வரை. அதன் மேல் கிருஷ்ணபட்ச பிரதமை திதி மகம் நட்சத்திரம் நாள் முழுவதும் (மாசி மகம்) சிரார்த்த திதி பௌர்ணமி மரண யோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திராடம் சுபநேரங்கள் காலை 6.30– 7.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12,00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம் –தயிர்) மாசி மகா மகம் கும்ப மேளா தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் தீர்த்த வாரி உற்சவம்.

மேடம்: உயர்வு, மேன்மை

இடம்பம்: புகழ், பெருமை

மிதுனம்: நற்செய்தி, புகழ்

கடகம்: நலம், ஆரோக்கியம்

சிம்மம்: நற்செயல் பாராட்டு

கன்னி: கவலை, கஷ்டம்

துலாம்: நன்மை, யோகம்

விருச்சிகம்: லாபம், லஷ்மீகரம்

தனுசு: அச்சம், பகை

மகரம்: பேராசை, நஷ்டம்

கும்பம்: சிரத்தை, முன்னேற்றம்

மீனம்; பரிவு, பாசம்

திருமாலை பாசுரம் 23. “கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர் பரந்து பாயும், பூம்பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்துவாழ்வேன்? பொருள்: கங்கையிலும் புனிதமான காவிரியின் நடுவில் பொங்கி வரும் நீர் பரந்து பாயும் படியான சோலைகள்  உள்ள திருவரங்கத்துள் எங்கள் தெய்வமான திருமால் அற்புதமாக பள்ளி கொண்டிருப்பதைக் கண்டு களிப்புற்று இந்தக் காட்சியைக் காணாமல் மறந்து வாழ முடியுமா? இந்த நிலையினை நெஞ்சப் பேழையில் எடுத்துச் செல்ல முடியாத ஏழையானேன்! (தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்)

ராகு சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1– 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)