"வளைந்து கொடுப்­பது ஒடிந்து போகாது வஞ்­சனை வாழ்வைக் கெடுக்கும். வணங்க ஆரம்­பிக்­கும்­போதே நீ வளர ஆரம்­பிக்­கின்றாய்”

Published on 2018-02-06 09:19:10

06.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 24 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பகல்1.16 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. சித்­திரை நட்­சத்­திரம் மாலை 3.51 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரர்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள். உத்­தி­ரட்­டாதி, ரேவதி சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளி­கை­காலம் 12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) திஷ்ரோஷ்­டகை.

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : அச்சம், பகை

மிதுனம் : அசதி, ஓய்வு

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : பிரிதி, மகிழ்ச்சி

கன்னி : உயர்வு, ஊக்கம்

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : வெற்றி, யோகம்

மகரம்             : காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : அனு­கூலம், சித்தி

இன்று சித்­திரை நட்­சத்­திரம் – வராஹப் பெரு­மாளை வழி­படல் நன்று. விஷ்­ணு­ ஆ­ல­யங்­களில் ஸ்ரீ ஆண்டாள் தாயார் திரு­மஞ்­சன சேவை "மரு­வாருந் திரு­மல்லி வளநாடி வாழியே" வன்­பு­துவை நகர்க்­கோதை மலர் பதங்கள் வாழியே!

("வளைந்து கொடுப்­பது ஒடிந்து போகாது வஞ்­சனை வாழ்வைக் கெடுக்கும். வணங்க ஆரம்­பிக்­கும்­போதே நீ வளர ஆரம்­பிக்­கின்றாய்”– கோல்­ரிடஜ்)

சுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)