03.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 21 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-02-03 12:38:27

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி பகல் 2.51 வரை.  அதன் மேல் சதுர்த்தி திதி. பூரம் நட்­சத்­திரம் மாலை 3.30 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதிகள் தேய்­பிறை திரி­தியை சதுர்த்தி (திதித்­வயம்) சித்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00–  7.30, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) ஸ்ரீ சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். கிருஷ்­ண­பட்ச சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம்.

மேடம் : வாழ்வு, வளம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : பொறுமை, அமைதி

கடகம் : தடங்கல், சங்­கடம்

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : பிணி, பீடை

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : இன்பம், சுகம்

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் :இன்பம், ஆரோக்­கியம்

இன்று பூரம் நட்­சத்­திரம். ஸ்ரீமன் நாரா­யணன் தேவி­யருள்  ஒரு­வ­ரான பூமிப்­பி­ராட்­டியார் அவ­தார திரு­நட்­சத்­திரம். அவள் ஸ்ரீ ஆண்­டா­ளாக அவ­தாரம் செய்த நட்­சத்­திரம். “பெரி­யா­வாழ்வார் பெண் பிள்­ளையாய் ஆண்டாள் பிறந்த பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்­துபார். ஆண்­டா­ளுக்கு உண்­டாகில் ஒப்பு இதற்கும் உண்டு. அஞ்சு குடிக்கு ஒரு சந்­த­தியாய் ஆழ்­வார்கள் தஞ்­செ­யலை விஞ்சி நிற்கும் தன்மை இவள்” இவளை பக்­தி­யுடன் நாளும் வழத்தாய் மனமே – உப­தேச ரத்ன மாலை. சூடிக்­கொ­டுத்த சுடர்க்­கொ­டியே தொல்­பாவை பாடி அரு­ள­வல்ல பல் வளையாய்– உய்யக் கொண்டார். இன்று கோதா பிராட்­டி­யான ஸ்ரீ ஆண்­டாளை வழி­படல் நன்று.

(“அன்­பிலே நண்­பனை வெற்றிக் கொள்; களத்­திலே எதி­ரியை வெற்றி கொள்; பண்­பிலே சபையை வெற்­றிக்கொள்” – கவிஞர் கண்­ண­தாசன்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள்:

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­கப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)