30.01.2018 ஏவிளம்பி வருடம் தைமாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

Published on 2018-01-30 11:14:34

30.01.2018 ஏவிளம்பி வருடம் தைமாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 10.09 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. பூனர்பூசம் நட்சத்திரம் முன்னிரவு 8.08 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம். கரிநாள் சுபம் விலக்குக. சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் திரங்கள்: மூலம், பூராடம். சுபநேரங்கள்: முற்பகல் 10.30 –11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகைகாலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு. (பரிகாரம்– பால்) நாளை தைப்பூசத் திருநாள்.

மேடம் : அசதி, ஓய்வு

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : உற்சாகம், வரவேற்பு

சிம்மம் : பகை, எதிர்ப்பு

கன்னி : லாபம், லக் ஷ்மீகரம்

துலாம் : ஜெயம், புகழ்

விருச்சிகம் : செலவு, விரயம்

தனுசு : தனம், சம்பத்து

மகரம் :காரியசித்தி, அனுகூலம்

கும்பம் : சுகம், ஆரோக்கியம்

மீனம் :காரியானுகூலம், சித்தி

சந்திர கிரகணம் நாளை மாலை பௌர்ணமி திதி பூசம் நட்சத்திரத்தில் மாலை 5.18 க்கு ஆரம்பித்து இரவு மணி 8.41க்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் முடிவடைகிறது. கிரகண மத்திய காலம் மாலை மணி 6.22 பூசம், அனுஷம், உத்திரட்டாதி, புனர்பூசம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வும். ராகு கிரஸ்தமான இப்பூரண சந்திர கிரகணம் நம் நாட்டில் தெரியும். கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலிருந்து வெளி யில் வரக்கூடாது.

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9

பொருந்தா எண்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள் கலந்த வர்ணங்கள். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)