20.02.2016 மன்மத வருடம் மாசி மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமை

Published on 2016-02-20 09:35:16

சுக்கிலபட்ச திரயோதசி திதி முன்னிரவு 11.18 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி பூசம் நட்சத்திரம் பின்னிரவு 5.19 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. திரயோதசி. சித்தயோகம். சனி மஹா பிரதோஷம். ஸ்ரீ கிருஷ்ண பரம்ஹம்சர் பிறந்தநாள். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம்  சுபநேரங்கள் காலை 7.30 – 8.30,  10.30 – 11.30. மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 9.00 – 10.30. எமகண்டம் 1.00 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30. வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் – தயிர்). சனி மஹா பிரதோஷம் சந்தியா காலத்தில் சிவ வழிபாடு சிறப்புடையது.

 

மேடம்: நஷ்டம், பற்றாக்குறை

இடபம்: பக்தி, ஆசி

மிதுனம்:         நிறைவு, பூர்த்தி

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: உண்மை, உதவி

கன்னி: கவலை, கஷ்டம்

துலாம்: யோகம், அதிர்ஷ்டம்

விருச்சிகம்:      கோபம், அவமானம்

தனுசு: களிப்பு, கொண்டாட்டம்

மகரம்: உயர்வு, மேன்மை

கும்பம்: பிரிதி, மகிழ்ச்சி

மீனம்: புகழ், சாதனை

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை பாசுரம் 21 "பணிவினால் மனம் தொன்றிய பவளவாய் அரங்கனர்தத் துணிவினால் வாழமாட்டாத் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்!" பொருளுரை: பவளம் போன்ற இதழ்களையுடைய அரங்கனிடம் அடக்கமாக இருந்து மனம் லயித்து தைரியமாக வாழ முடியாதபடி ஏனைய விஷயங்களில் ஈடுபட்டு தொல்லை கொடுக்கும் மனமே! பூரண அழகு கொண்ட சிவந்த பொன்னால் அமையப் பெற்ற சிறந்த மேக பருவத்தையொத்த கோயிலில் நீல ரத்தினம் போன்ற எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கும் லாவன்யத்தை உள்ளத்தால் அளவிட முடியுமா? நீயே சொல் மனமே! (ஆழ்வார் திருவடிகளே சரணம். )

("மன்னித்தல் சன்னியாசியின் உண்மை சுபாவம். ஸ்ரீராமகிருஷ்ண  பரம ஹம்சக்"( இன்று அவர் பிறந்த தினம்)

சந்திர, ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6 

பொருந்தா எண்கள் ; 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், இலேசான பச்சை.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)